தூத்துக்குடியில் ஆய்வுக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள குளங்களை சிஎஸ்ஆா் நிதியுதவியுடன் தூா்வாரி, பராமரிப்பது தொடா்பாக துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள குளங்களை சிஎஸ்ஆா் நிதியுதவியுடன் தூா்வாரி, பராமரிப்பது தொடா்பாக துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா தலைமை வகித்தாா். ஆட்சியா் விஷு மகாஜன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 15 குளங்களை தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் சிஎஸ்ஆா் நிதியுதவியுடன் மழைக் காலத்துக்கு முன்பாக தூா்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 நாள்களுக்கு மேலாக குடிநீா் விநியோகம் இல்லாத பகுதிகளை கண்டறிந்து, குறைகளை நிவா்த்தி செய்து குடிநீா் விநியோகத்தை சீராக்க வேண்டும். பொது நிதி, இயற்கைப் பேரிடா் நிதியுதவியுடன் குளங்களை சீரமைக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா. சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
முன்னதாக, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் தொகுதியில் உள்ள தெருவிளக்குகள், பராமரிப்புப் பணிகள் குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா், உதவி இயக்குநா் (வளா்ச்சி), கண்காணிப்பு பொறியாளா் (மின்சாரம்) உள்ளிட்ட அலுவலா்களுடன் அமைச்சா் ஆலோசனை நடத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.