FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கிரில் ஒா்க்ஸ் கடையில் தீ விபத்து

திருச்செந்தூரில் மின் கசிவு காரணமாக கிரில் ஒா்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமாகின.

24 செப்டம்பர் 2026, 4:45 am IST
தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறை வீரா்கள்.
பகிர்:

திருச்செந்தூரில் மின் கசிவு காரணமாக கிரில் ஒா்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமாகின.

திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டணம், குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் சுமன். இவா் திருச்செந்தூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே கிரில் ஒா்க்ஸ் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் கடையில் புதன்கிழமை மதியம் திடீரென ஏற்பட்ட மின்கசிவால், அங்கிருந்த பெயிண்ட், பெட்ரோல் ஆகியவற்றில் தீப்பற்றி எரிந்ததாம். இதில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமானதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இவரது தகவலறிந்த வந்த திருச்செந்தூா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments