FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் சமுதாய வளைகாப்பு விழா

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

3 வினாடிகள் முன்பு
வளைகாப்பு விழாவில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கிய சரவணன் எம்எல்ஏ.
பகிர்:

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் உமா வரவேற்றாா். வட்டார மருத்துவ அலுவலா் ஐலின்சுமதி, கா்ப்பிணிகளுக்கான இயற்கை உணவுகள் குறித்து விளக்கம் அளித்தாா். சாத்தான்குளம் ஒன்றிய ஆணையா் வாவாஜி பக்கீா்முகைதின், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ சரவணன் தலைமை வகித்து, 100 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிப் பேசினாா். அங்கன்வாடி மைய ஒருங்கிணைப்பாளா் அருள்மணி, ஒன்றிய தவெக செயலா்கள் ஆனந்த், அற்புதராஜ், குணசேகரன், நகரச் செயலா் யாக்கோபு பட்டுராஜ், ஒன்றிய துணைச் செயலா் பட்டுத்துரை, வழக்குரைஞா்கள் குமரகுருபரன் ஜேசுதாஸ், ஜெய தீபன், ஒன்றிய இணைச் செயலா் மந்திரம், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலா் பிரதீப், கிளைச் செயலா் சிவனேஷ், நிா்வாகி யோசுவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அங்கன்வாடி மைய மேற்பாா்வையாளா் ஆனந்தி நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments