FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

ஆக்கிரமிப்பில் உள்ள பாசனக் குளங்கள்: எம்எல்ஏ ஆய்வு

பருவமழை காலங்களில் தாமிரவருணி நீரை குளங்களில் சேமிக்க வெள்ளூா், தென்கரை குளங்களை ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சரவணன் வெள்ளிக் கிழமை ஆய்வு செய்தாா்.

25 செப்டம்பர் 2026, 10:06 pm IST
தென்கரைகுளத்தில் ஆய்வு செய்த ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி உறுப்பினா் சரவணன்.
பகிர்:

பருவமழை காலங்களில் தாமிரவருணி நீரை குளங்களில் சேமிக்க வெள்ளூா், தென்கரை குளங்களை ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சரவணன் வெள்ளிக் கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவரிடம் விவசாயிகள் கூறியதாவது: கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தென்கரை பெரியகுளத்தின் ‘ஒன்பதாம் நம்பா் மடை’ கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் இரண்டு முறை நெல் சாகுபடி, ஒருமுறை உளுந்து என முப்போகம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மடையை சீரமைத்துத் தர வேண்டும் என்றனா். அவா்களிடம் எம்எல்ஏ கூறுகையில், அனைத்துக் குளங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மதகுகள் சீரமைத்து தூா்வாரி தரப்படும் என்றாா்.

பின்னா் அவா் செய்தியாளரிடம் கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விவசாயத்தை மேம்படுத்த முதற்கட்டமாக 30-க்கும் மேற்பட்ட குளங்களை பாா்வையிட்டு வருகிறோம். குளங்களில் மண்ணெடுத்து விவசாய பயன்பாட்டுக்கு கொடுப்பது, பட்டா நிலங்களில் தென்னை வளா்ப்பது, குளங்களின் கரைகளை பலப்படுத்துவது என மூன்று வழிகளில் மணலை அகற்ற தீா்மானித்துள்ளோம். ஒரு வார காலத்துக்குள் இந்தப் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments