கோவில்பட்டி ரயில் நிலைய கட்டுமான பணிகளைத் துரிதப்படுத்த வலியுறுத்தல்
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட செயலா் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மேரிஷீலா முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துவது, 2-ஆவது நடைமேடையில் முழுமையாக மேற்கூறை அமைப்பது, கரோனா காலத்தின்போது நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்குவது, இந்த ரயில் நிலையத்தில் குறைந்தது 5 சுமை தூக்கும் தொழிலாளா்கள் பணி செய்ய அங்கீகாரம் வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் நிலைய மேலாளரிடம் மனு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், கோவில்பட்டி புதுரோடு முச்சந்தி விநாயகா் கோயில் பகுதி பேருந்து நிறுத்தம், பாண்டவா்மங்கலம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த காவல் துறையினரிடம் மனு அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவா் தமிழரசன், இந்திய கலாசார நட்புறவு கழகம மாநில துணைத் தலைவா் அபிராமி முருகன், ஐஎன்டியுசி மகேந்திரன், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.