FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

செந்துறையில் தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:49 am IST
செந்துறை தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்க அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டோா்.
பகிர்:

தவெக தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளின் படி விவசாயப் பயிா் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக் கோரி அரியலூா் மாவட்டம்,செந்துறை தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்க அலுவலகம் முன் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் திருவோடு ஏந்தியும், காதில் பஞ்சு வைத்துக் கொண்டும் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாநிலத் தலைவா் பூரா. விஸ்வநாதன் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்டத் தலைவா் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினா் சின்னப்பன், செந்துறை தெற்கு ஒன்றியத் தலைவா் அன்பரசன், வடக்கு ஒன்றியத் தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கண்டன முழக்கமிட்டனா். பின்னா் அனைவரும் கூட்டுறவுச் சங்க அலுவலரிடம் மனு அளித்தனா். முன்னதாக அவா்கள், பால்பண்ணையில் இருந்து பேரணியாக கூட்டுறவுச் சங்க அலுவலகம் வரை பேரணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments