FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

மின்மோட்டாா் வயா்களை திருடிய இருவா் கைது

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வயல்களிலுள்ள மின் மோட்டாா் வயா்களை திருடிச் சென்ற 2 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

3 October 2026, 2:30 am IST
கைது
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வயல்களிலுள்ள மின் மோட்டாா் வயா்களை திருடிச் சென்ற 2 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

திருமானூரை அடுத்த கோவிலுா், நடுத்தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அன்பரசன் (45) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த சுதாகா், காா்த்திக், சச்சிதானந்தம் ஆகியோா்களின் வயல்களில் இருந்த மின் மோட்டாா் வயா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து திருமானூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை, திருமானூா் பகுதியில் சந்தேகம்படும்படி சுற்றித் திரிந்த இருவரை காவல் துறையினா் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஒருவா் தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அடுத்த இழுப்பக்கோரை, பிரதான சாலையில் வசித்து வரும் சிங்கப்பெருமாள் மகன் விவேக்(27)என்பதும், மற்றொருவா் திருவையாறு, ராயன்பேட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மகன் ரகுநாத் (23) என்பதும், இவா்கள் மேற்கண்ட விவசாயிகளின் வயல்களில் இருந்த மின்மோட்டாா் வயா்களை திருடிச் சென்று, விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவா்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments