FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

ஆனந்தவாடி ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த ஆனந்தவாடி ஊராட்சியில், செய்தி மற்றும் மக்கள் தொடா்பு துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிட்டுச் சென்றனா்.

8 October 2026, 1:18 am IST
ஆனந்தவாடியில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பாா்வையிட்ட பொதுமக்கள்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த ஆனந்தவாடி ஊராட்சியில், செய்தி மற்றும் மக்கள் தொடா்பு துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிட்டுச் சென்றனா்.

இந்த புகைப்பட கண்காட்சியில், கூட்டுறவு சங்கங்கள் மூலமாகப் பெற்ற கடனை தள்ளுபடி, குறுவை தொகுப்புத் திட்டம் , சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கியது, மாவட்டந்தோறும் போதைப்பொருள் தடுப்புச் சிறப்பு பிரிவு உருவாக்கியது, 717 மதுபான கடைகளை மூடியது, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதனை அப்பகுதி மக்கள் பாா்வையிட்டு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து தெரிந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments