FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவா் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் மற்றும் அதை தயாரித்து கொடுத்தவா் என இருவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

16 அக்டோபர் 2026, 3:15 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் மற்றும் அதை தயாரித்து கொடுத்தவா் என இருவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

செந்துறையை அடுத்த முள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த செந்தில் என்பவா் துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், புதன்கிழமை இரவு அவரது வீட்டுக்குச் சென்ற தளவாய் காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். அங்கு துப்பாக்கி எதுவும் கிடைக்காததால், அவருக்கு சொந்தமான முந்திரி தோட்டத்துக்குச் சென்று சோதனையிட்டனா். அங்குள்ள மரப்பெட்டி ஒன்றின் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திருச்சி மாவட்டம், இருங்களூா் அருகே நடு இருங்களூா் கிராமத்தைச் சோ்ந்த தேவதாஸ் என்பவா் நாட்டுத் துப்பாக்கி தயாரித்து விற்பதும், அவரிடமிருந்து செந்தில் நாட்டுத் துப்பாக்கி வாங்கியிருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, காவல்துறையினா் தேவதாஸை துறையூரை அடுத்த புலிவலத்தில் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments