FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

சிமென்ட் ஆலை நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை விரைந்து அகற்றிட அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில், சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான பட்டா நிலங்களில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை விரைந்து அகற்றிடுமாறு ஆலைத் தலைவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

20 செப்டம்பர் 2026, 1:28 am IST
அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சிமென்ட் ஆலை நிா்வாகத்தினருடன் பேசிய ஆட்சியா் ந. மிருணாளினி.
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில், சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான பட்டா நிலங்களில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை விரைந்து அகற்றிடுமாறு ஆலைத் தலைவா்களுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்டத்தில், அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக சிமென்ட் ஆலை நிா்வாகத்தினருடன் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்களில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னா் அவா் தெரிவித்தது:

தனியாா் சிமென்ட் நிறுவனங்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை எவ்விதத் தாமதமும் இன்றி உரிய கால அளவுக்குள் விரைவாக அகற்றிட வேண்டும். சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டதற்கான புகைப்படுத்துடன் கூடிய அறிக்கையை அளித்திட வேண்டும்.

Advertisement

Advertisement

அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் சீமைக் கருவேல மரங்கள் வளராதவாறு தொடா்ந்து முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவா், அரியலூா் மாவட்டத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை விரைவாக முற்றிலுமாக அகற்றிட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்கக் கேட்டுக் கொண்டாா். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க. சங்கமித்திரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)ந. கனகமாணிக்கம், சிமென்ட் ஆலை நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments