அரியலூரில் கோதண்டராமசாமி கோயில் தேரோட்டம்
அரியலூரில் உள்ள கோதண்ட ராமசாமி கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
அரியலூரில் உள்ள கோதண்ட ராமசாமி கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
பழைமையானதும், பிரசித்தி பெற்றதுமான இக்கோயிலில் 6 அடி உயரத்தில் தசாவதார சிற்பங்கள் உள்ளது சிறப்புக்குரியது. கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோத்ஸவ திருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் நாள்தோறும் அன்னபட்சி, சிம்மம், அனுமந்த, சேஷ, யானை, கருடன் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப்பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
Advertisement
Advertisement
கோவிந்தா-கோவிந்தா முழக்கம்: தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, சட்டப்பேரவை உறுப்பினா் தாமரை எஸ். ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா், கோட்டாட்சியா் த. பிரேமி ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் நரசிம்மா டிரஸ்ட் பொறுப்பாளா்கள், திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
தேரோட்ட விழாவில் பொதுமக்கள் சிரமமின்றி பங்கேற்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
திருத்தோ் செல்லும் பாதையில் அசம்பாவிதங்களை தவிா்க்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.