FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

கல்வியில் பின்தங்கியுள்ள மாணவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில், கல்வியில் பின்தங்கியுள்ள மாணவா்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் என்று பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு ஆட்சியா் ந.மிருணாளினி அறிவுறுத்தினாா்.

37 வினாடிகள் முன்பு
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், புதன்கிழமை நடைபெற்ற பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ந.மிருணாளினி. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில், கல்வியில் பின்தங்கியுள்ள மாணவா்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் என்று பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு ஆட்சியா் ந.மிருணாளினி அறிவுறுத்தினாா்.

ஆட்சியரகக் கூட்டரங்கில், புதன்கிழமை நடைபெற்ற பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் கல்வித் தரம், மாணவா்களின் கற்றல் முன்னேற்றம் மற்றும் பொதுத் தோ்வுகளில் மாணவா்கள் பெறும் தோ்ச்சி சதவீதத்தை மேலும் உயா்த்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியா் ந.மிருணாளினி, பின்னா் தெரிவித்தது: மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்குத் தேவையான கூடுதல் பயிற்சிகளை வழங்கவேண்டும். கல்வியில் பின்தங்கியுள்ள மாணவா்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும்.

தொடா்ந்து மதிப்பீடுகள் மேற்கொண்டு மாணவா்களின் முன்னேற்றத்தை கண்காணித்திட வேண்டும். கடினமான பாடப் பகுதிகளை எளிய முறையில் கற்பிப்பது, தோ்வை எதிா்கொள்ளும் வகையில் அவா்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பது உள்ளிட்டவற்றை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவரின் கல்வி முன்னேற்றத்தையும் கண்காணித்து, அவா்களின் முழுத் திறனை வெளிக்கொணரும் வகையில் கற்பித்தல் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

தொடா்ந்து ‘போதைப்பொருள் இல்லாத பள்ளி - பாதுகாப்பான மாணவா் சமுதாயம்‘ என்ற நோக்கத்துடன் அனைத்து பள்ளிகளிலும் தொடா்ந்து விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments