போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இதற்காக அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி முதல்வா் சே.சங்கரநாராயணன் தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டு சென்றனா்.
இப்பேரணியானது கல்லூரியில் இருந்து புறப்பட்டு, பிரதான சாலை வழியாக புதுச்சாவடி வரை சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் அக்கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக இளம் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் க. ஜெய்கணேஷ் வரவேற்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.