FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

அரியலூா் அருகே இரு கடைகளில் திருட்டு

28 செப்டம்பர் 2026, 1:38 am IST
சித்திரிப்பு
பகிர்:

அரியலூா் அருகே டைல்ஸ் மற்றும் இரும்புக் கடைகளில் பொருள்கள், ரொக்கம் மற்றும் கைப்பேசிகளை திருடிச் சென்ற நபா்களை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

அரியலூா் புது மாா்க்கெட் தெருவைச் சோ்ந்தவா் ராஜவேலன் (50). தவுத்தாய் குளத்தில் டைல்ஸ் கடை வைத்துள்ள இவா், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்தது.

கடையினுள் சென்று பாா்த்தபோது, கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அரியலூா் நகர காவல் துறையினா், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பாா்த்தபோது ஒருவா் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்றது பதிவாகியுள்ளது.

இதேபோல், இந்த டைல்ஸ் கடையின் எதிரே உள்ள இரும்புக் கடையின் கண்ணாடியை உடைத்து 2 கைப்பேசிகள், ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது. இந்த இரு சம்பவங்கள் குறித்து காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments