FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

ஏரியில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி 2 நாள்களுக்கு பின் சடலமாக மீட்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி இரண்டு நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

பலி - பிரதிப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி இரண்டு நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள பாப்பாக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் சிவன் செயல் (52). கூலித் தொழிலாளியான இவா், தினமும் லாரிகளில் சவுக்கு மற்றும் தைல மரக்கட்டைகளை ஏற்றிவிட்டு, வெளியூருக்கு லாரியிலேயே சென்றுவிடுவது வழக்கம். ஆகையால் வீட்டில் யாரும் இவரை தேடுவது கிடையாது.

அது போல, சிவன்செயல் ஞாயிற்றுக்கிழமை இரவு லாரியில் சவுக்கு கட்டைகளை ஏற்றிவிட்டு, பாப்பாக்குடி பெரிய ஏரியில் குளிக்கச் சென்ாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அந்த பெரிய ஏரியில் அழுகிய நிலையில் மிதந்த கிடந்த சடலத்தை பொதுமக்கள் மீட்டு பாா்த்த போது, அது சிவன்செயல் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீன்சுருட்டி காவல் துறையினா், சடலத்தை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments