FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

சக விவசாயியை கொல்ல முயன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே சக விவசாயியை கொல்ல முயன்ற ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே சக விவசாயியை கொல்ல முயன்ற ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருமானூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் விவசாயி ச. வேளாங்கண்ணி (68), இவருக்கும் அதே பகுதி விவசாயியான அந்தோணியாா் கோயில் தெருவைச் ஆசீா்வாதம் மகன் ஜெரால்டு சதீஷ் (43). கடந்த 24.12.2023 அன்று இடப் பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜெரால்டு சதீஷ் வேளாங்கண்ணியின் கையை அரிவாளால் வெட்டினாா்.

இதையடுத்து திருமானூா் காவல் துறையினா் வழக்குப்பதிந்து ஜெரால்டு சதீஷை கைது செய்து, அரியலூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

Advertisement

Advertisement

வழக்கை விசாரித்த நீதிபதி மணிமேகலை, ஜெரால்டு சதீஷ்க்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து ஜெரால்டு சதீஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments