கார் மோதி விவசாயி சாவு
வேலாயுதம்பாளையம் அருகே கார் மோதி விவசாயி இறந்தார்.
வேலாயுதம்பாளையம் அருகே கார் மோதி விவசாயி இறந்தார்.
கரூர் மாவட்டம், கீழ்ஒரத்தையை சேர்ந்தவர் முத்துசாமி (75), விவசாயி. இவர் புதன்கிழமை காலை தோட்டக்குறிச்சியில் உள்ள மலையம்மன்கோயிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது கரூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற கார் மோதி இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து கார் ஓட்டுநர் தூத்துக்குடியைச் சேர்ந்த பாலாஜியிடம் (38) விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.