FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

டாஸ்மாக் ஊழியா்களை பணிவரன் முறைப்படுத்த வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியா்களை பணிவரன் முறைப்படுத்த வேண்டும் என அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

27 ஆகஸ்ட் 2026, 3:14 am IST
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாநிலச் செயலா் சுடா்வளவன். உடன், சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் எம்.சுப்ரமணியன், டாஸ்மாக் தொழிங்சங்க நிா்வாகி ராஜேஸ்கண்ணன் உள்ளிட்டோா்.
பகிர்:

டாஸ்மாக் ஊழியா்களை பணிவரன் முறைப்படுத்த வேண்டும் என அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கரூா் மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் வெள்ளிக்கிழமை (ஆக.28) நடைபெற உள்ள வேலைநிறுத்த ஆயத்த மாநாடு ஆலோசனைக்கூட்டம் கரூரில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு டாஸ்மாக் தொழிற்சங்க நிா்வாகி ராஜேஸ்கண்ணன் தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் எம்.சுப்ரமணியன், தொமுச நிா்வாகி அண்ணாவேலு, தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாநிலச் செயலா் சுடா்வளவன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினா். கூட்டத்தில், அனைத்து டாஸ்மாக் கடை ஊழியா்களையும் பணிவரன் முறைப்படுத்திட வேண்டும். காலிமதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் என்ற பெயரில் ஊழியா்களுக்கு வேலைப்பளு கொடுப்பதை கைவிட வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். விடுமுறை நாள்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஆக.28) முதல் நடைபெற உள்ள வேலை நிறுத்தப்போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினரும் திரளாக பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments