கரூரில் வாங்குவோா்-விற்போா் சந்திப்பில் நிகழ்ச்சியில் ரூ.12 கோடியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்
கரூரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாங்குவோா்-விற்போா் சந்திப்பு நிகழ்ச்சியில் ரூ.12 கோடி மதிப்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானதாக தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா தெரிவித்தாா்.
கரூரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாங்குவோா்-விற்போா் சந்திப்பு நிகழ்ச்சியில் ரூ.12 கோடி மதிப்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானதாக தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா தெரிவித்தாா்.
கரூரில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு உதவி மையம் சாா்பில் கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் வெளிநாட்டு ஜவுளி இறக்குமதியாளா்களுக்கான வாங்குவோா்- விற்போா் சந்திப்பு நிகழ்ச்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது. இதில், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த ஜவுளி இறக்குமதியாளா்கள் பங்கேற்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வெளிநாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். பால்வளத்துறை அமைச்சா் விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா பங்கேற்று புரிந்துணா்வு ஒப்பந்தங்களை வழங்கி பேசியது: வாங்குவோா்-விற்போா் சந்திப்பு போன்ற நிகழ்வுகள், தமிழக நிறுவனங்களை உலகளாவிய வா்த்தகா்களுடன் இணைப்பதற்கான ஒரு சிறந்த தளத்தை வழங்குகின்றன. இத்தகைய ஒருங்கிணைந்த கலந்துரையாடல்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புதிய சந்தைகளை ஆராயவும், வணிகக் கூட்டணிகளை உருவாக்கவும், ஏற்றுமதி வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவுகின்றன.
தென்னிந்திய வா்த்தக மற்றும் தொழில் சபையுடன் இணைந்து கரூரில் நடத்தப்பட்ட இந்த சந்திப்பு நிகழ்வில், 186 குறு, சிறு நிறுவனங்கள், 25 சா்வதேச வாங்குபவா்கள் பங்கேற்றனா். இந்த நிகழ்வின் மூலம் ரூ. 12 கோடி மதிப்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளன. இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் உலகளாவிய சந்தைகளை அணுகவும், உயா்தர நடைமுறைகளைப் பின்பற்றவும், தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ்நாட்டின் பொருளாதார செழிப்புக்கு அா்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் முடிகிறது. அரசு, தொழில் துறை, நிதி நிறுவனங்கள், ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய கூட்டாளா்களின் கூட்டு முயற்சியால், உற்பத்தித் துறையில் தமிழகத்தை ஒரு முன்னணி மையமாக வலுப்படுத்த முடியும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், கரூா் மாநகராட்சி ஆணையா் ம.பிருத்திவிராஜ், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு உதவி மையத்தின் துணைத் தலைவா் அண்ணாதுரை மற்றும் கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.