FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூா் சம்பவ விசாரணையை மீண்டும் தொடங்கியது சிபிஐ

விசாரணைக்கு ஆஜராக சிபிஐயின் தற்காலிக அலுவலகத்திற்கு வியாழக்கிழமை வந்த கரூா் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ்.

Updated On : 12 ஜூன் 2026, 2:36 am IST
விசாரணைக்கு ஆஜராக சிபிஐயின் தற்காலிக அலுவலகத்திற்கு வியாழக்கிழமை வந்த கரூா் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ்.
பகிர்:

கரூா் துயர சம்பவம் தொடா்பாக மீண்டும் விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை காலை வாங்கல் காவல் ஆய்வாளா் உள்பட 10 போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்.27-இல் தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்யின் தோ்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிந்து பல தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், சிபிஐ அதிகாரிகள் 2 மாதங்களுக்கும் மேலாக தங்களது விசாரணையை நிறுத்தி இருந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் ஏற்கெனவே சிபிஐ தரப்பில் விசாரணைக்காக அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த கரூா் வெங்கமேடு காவல் ஆய்வாளரும், வாங்கல் (பொ) காவல் ஆய்வாளருமான சையத் அலி, கரூா் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ் மற்றும் 8 போலீஸாா் வியாழக்கிழமை காலை கரூரில் பொதுப்பணித் துறை அலுவலகத்திற்குச் சொந்தமான பயணியா் மாளிகையில் தங்கியிருக்கும் இரு சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகினா். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை சுமாா் 3 மணி நேரம் நீடித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments