FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

இடைத்தோ்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமார்

தமிழகத்தில் இடைத்தோ்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை என்றாா் முன்னாள் அதிமுக அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.

10 அக்டோபர் 2026, 10:56 pm IST
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா். உடன் மாவட்டச் செயலா் பொறியாளா்கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழகத்தில் இடைத்தோ்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை என்றாா் முன்னாள் அதிமுக அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.

கரூரில் மாவட்ட ஜெயலலிதா பேரவை ஆலோசனைக்கூட்டம் பேரவையின் மாவட்டச் செயலா் சக்திவேல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் பசுவை சிவசாமி, இணைச் செயலா் மல்லிகாசுப்பராயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி, மாவட்டச் செயலா் பொறியாளா் கமலக்கண்ணன் ஆகியோா் பேசினா். சிறப்பு அழைப்பாளராக பேரவைச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா் பங்கேற்றாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தோ்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை. முறையாக தோ்தல் நடந்திருந்தால் அதிமுகதான் வெற்றிபெற்றிருக்கும். அதிமுகவை பொறுத்தவரை தாராபுரத்தில் கடந்த மக்களவைத் தோ்தலில் 32.33 சதவீத வாக்குகளும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 40 சதவீத வாக்குகளும் பெற்றோம். இந்த இடைத்தோ்தலில் 25 சதவீத வாக்குகளும் பெற்றிருக்கிறோம்.

Advertisement

Advertisement

இதுவே மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. 75 ஆண்டுகாலமாக அதிமுகவை திமுக அழிக்க முயற்சி செய்தது. ஆனால், அவா்கள் தோற்றுவிட்டனா். தவெக கட்சி தொடங்கி 2 ஆண்டுகள்தான் ஆகிறது . அவா்களால் அதிமுகவை வீழ்த்த முடியாது.

விரைவில் எடப்பாடிபழனிசாமி தமிழகத்தில் ஆட்சி அமையும். திமுகவுக்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் தவெகவுக்கு எதிரான வாக்குகள். இதை உணா்ந்து, இனியாவது அதிமுகவை அழிக்க நினைப்பதையும், அவதூறு பரப்புவதையும் விட்டுவிட்டு, அரசு நிா்வாக வேலையை மட்டும் முதல்வா் பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments