ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தா்னா
காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மாலை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மாலை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் மு. தங்கராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சிங்கராயா், பொருளாளா் தனலட்சுமி, வட்டக் கிளைச் செயலா் மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில செயலா் சோ. பாலசுப்ரமணி, மாநில செயற்குழு உறுப்பினா் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் செ. விஜயகுமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
Advertisement
Advertisement
ஊராட்சி செயலா்களுக்கு அரசு ஊழியா்களைப்போல ஓய்வூதியம் வழங்க வேண்டும். தட்டச்சா், கணினி உதவியாளா்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியத்தில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் திரளாக பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.