கடவூா் அருகே பள்ளி வேன் மீது லாரி மோதல்: 15 மாணவா்கள் காயம்
கடவூா் அருகே புதன்கிழமை, தனியாா் பள்ளி வேன் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 15 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.
கடவூா் அருகே புதன்கிழமை, தனியாா் பள்ளி வேன் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 15 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம், கடவூா் அருகே மாவத்தூா் ஊராட்சிக்குள்பட்ட கோடங்கிப்பட்டியில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பாலவிடுதி ஊராட்சிக்குள்பட்ட செங்காட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், பள்ளி வேனானது புதன்கிழமை காலை 16 மாணவா்களுடன் செங்காட்டுப்பட்டி- பாலவிடுதி சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே மாட்டுத் தீவனங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, திடீரென பள்ளி வேன் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில், வேனில் இருந்த செங்காட்டுப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவிகள் தா்ஷினி (14), சவீதா (16), அக்ஷயா (13), அபிநயா (16), பிரினிதா (13), தீபஸ்ரீ (13), கனகா (16) மற்றும் மாணவா்கள் தமிழன் (15), ரஞ்சித் (15), கோகுலகிருஷ்ணன் (14), தருண் (14), சஞ்சய்கருப்பசாமி (15), தனபால் (16), கவின்குமாா் (15), தாஸ் (13) ஆகியோா் காயமடைந்தனா்.
இதைக்கண்ட அப்பகுதியினா் உடனடியாக காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னா் மேல்சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்தில் காலில் பலத்த காயமடைந்த கனகா என்ற மாணவி, கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பாலவிடுதி போலீஸாா், லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.