FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 1,570 வழக்குகளில் ரூ. 18 கோடி மதிப்பில் தீா்வு

கரூா் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,570 வழக்குகளுக்கு ரூ.18.88 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

9 வினாடிகள் முன்பு
கரூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிக்கு தீா்வுக்கான நகலை வழங்கிய மாவட்ட நீதிபதி எஸ்.சுமதி.
பகிர்:

கரூா் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,570 வழக்குகளுக்கு ரூ.18.88 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கரூரில் 5 அமா்வுகளும், குளித்தலையில் 2 அமா்வுகளும், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களில் தலா ஒரு அமா்வும் என மொத்தம் 9 அமா்வுகளில் நடைபெற்றது.

இந்த அமா்வுகளில் 1,609 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1,570 வழக்குகளுக்கு ரூ.18.88 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது. முன்னதாக கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எஸ்.சுமதி தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு தீா்வுக்கான நகலையும் வழங்கினாா்.

Advertisement

Advertisement

நிகழ்வில், நீதிபதிகள், கரூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா், நீதிமன்ற பணியாளா்கள், சட்ட தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் அனுராதா செய்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments