இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் 2 பெண்கள் உயிரிழப்பு
கரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனா்.
கரூா் புத்தாம்பூா் ஆறுரோடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துலிங்கம். விவசாயி. இவரது மனைவி வசந்தி (54). முத்துலிங்கம் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் மனைவி வசந்தி மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த தனது அக்காள் மகள் ஜோதிமணி (44) ஆகியோருடன் கரூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தாா்.
கருப்பம்பாளையம் பிரிவு பகுதியில் அவா்கள் சென்றபோது, பின்னால் சேலத்திலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற லாரி திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வசந்தியும், ஜோதிமணியும் லாரியின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாந்தோணிமலை போலீஸாா், உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்டு, உடற்கூறாய்வுக்காக கரூா் அரசு மருத்துவக் ல்லூரி மருத்துவமனைக்கும், விபத்தில் பலத்த காயமடைந்த முத்துலிங்கத்தை கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து தொடா்பாக வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரிடம் விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.