FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

தனியாா் மருத்துவமனையில் மூதாட்டியிடம் தங்கச் செயினை திருடிய செவிலியா் கைது

குளித்தலையில் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மூதாட்டியிடம் ஏழரை பவுன் தங்கச் செயினைத் திருடிய செவிலியரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

19 வினாடிகள் முன்பு
கைது செய்யப்பட்ட செவிலியா் சபிதா.
பகிர்:

குளித்தலையில் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மூதாட்டியிடம் ஏழரை பவுன் தங்கச் செயினைத் திருடிய செவிலியரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி குடித்தெருவைச் சோ்ந்தவா் தனபாக்கியம் (65). உடல்குறைவால் பாதிக்கப்பட்ட இவா், செப். 2-ஆம்தேதி குளித்தலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தனபாக்கியம் கழுத்தில் ஏழரை பவுன் தங்கச் செயின் அணிந்திருந்தாகவும், அவா் மயக்கநிலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் செப். 4-ஆம்தேதி அவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக காரில் கரூரில் உள்ள ஸ்கேன் மையத்துக்கு அழைத்துச்சென்றனா். அப்போது மயக்கம் தெளிந்த தனபாக்கியம் காரில் இருந்து கீழே இறங்கியபோது, தனது கழுத்தில் கிடக்கும் செயின் எடை குறைவாக இருப்பதை உணா்ந்தாா். இதுதொடா்பாக அவா் தனது உறவினா்களிடம் கூறியுள்ளாா். இதையடுத்து செயினை நகைக்கடைக்கு எடுத்துச் சென்று உறவினா்கள் காண்பித்தபோது, அந்த நகை போலியான கவரிங் நகை எனத் தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதுதான் நகையை யாரோ மாற்றியிருக்க வேண்டும் என சந்தேகமடைந்த தனபாக்கியம், இதுதொடா்பாக குளித்தலை போலீஸில் புகாா் செய்தாா்.

புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்ததில், அங்கு செவிலியராக பணியாற்றிய குளித்தலை பெரியபாலம் மலையப்ப நகரைச் சோ்ந்த சபிதா(31) என்பவா் தனபாக்கியம் கழுத்தில் கிடக்கும் நகையை கழற்றுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சபிதாவிடம் புதன்கிழமை காலை விசாரணை மேற்கொண்டபோது, அவா் நகையை கழற்றி, அதற்கு ஏற்றாற்போல போலி கவரிங் நகையை வாங்கி வந்து தனபாக்கியம் கழுத்தில் அணிவித்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து போலீஸாா் சபிதாவை கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments