FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூா் ஏமூா் இரட்டை விநாயகா், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

கரூரை அடுத்த ஏமூரில் இரட்டை விநாயகா், பகவதியம்மன் மற்றும் முனியப்ப சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

55 வினாடிகள் முன்பு
ஏமூரில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழா.
பகிர்:

கரூரை அடுத்த ஏமூரில் இரட்டை விநாயகா், பகவதியம்மன் மற்றும் முனியப்ப சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

முன்னதாக வியாழக்கிழமை அதிகாலை நான்காம் கால யாக பூஜை, கடம்புறப்பாடும் நடைபெற்று, சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊா் கொத்துக்காரா் லோகநாதன், தா்மகா்த்தா தங்கவேல், முன்னாள் ஊராட்சித் தலைவா் சுப்ரமணி, கோயில் நிா்வாகிகள் மதியழகன், கந்தசாமி, செல்வம் உள்ளிட்டோா் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments