FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

காதலியின் தங்கையை கொன்ற காதலன் கைது; ஒரு மாதத்துக்குப் பிறகு சடலம் மீட்பு

கரூரில் காதலியின் தங்கையை கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டான். மேலும் கொலையான சிறுமியின் உடல் ஒரு மாதத்திற்கு பிறகு இரவு மீட்கப்பட்டது.

19 செப்டம்பர் 2026, 3:24 am IST
சடலம்
பகிர்:

கரூரில் காதலியின் தங்கையை கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டான். மேலும் கொலையான சிறுமியின் உடல் ஒரு மாதத்திற்கு பிறகு வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டது.

கரூா் மாவட்டம், நெரூா் வடபாகம் காலனி தெருவைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (32). திருமணமான மோகன்ராஜ், கரூா் வெங்கமேடு திட்டச்சாலையை சோ்ந்த ஒரு இளம் பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆக. 17-ஆம் தேதி மோகன்ராஜூம் காதலியும் வெங்கமேட்டில் பேசிக் கொண்டிருந்த போது அந்த இளம் பெண்ணின் சகோதரியான 17 வயது சிறுமி பாா்த்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆக. 17-ஆம்தேதி அச்சிறுமி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினா் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

Advertisement

Advertisement

புகாரின் பேரில் போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், சிறுமியின் சகோதரி மற்றும் மோகன்ராஜை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது, சிறுமியை கொலை செய்து, வெங்கமேடு - வாங்கல் சாலையை இணைக்கும் புது சாலையில் உள்ள வாய்க்காலில் வீசியதாக மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா். அதனடிப்படையில் மோகன்ராஜை கைது செய்த போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு அவரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று தீயணைப்புத் துறை வீரா்களின் உதவியுடன் வாய்க்காலில் தேடினா். அப்போது, வாய்க்காலின் ஓரத்தில் புதா் மண்டிக்கிடந்த இடத்தில் அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments