FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

கரூா் சம்பவம் முதலாமாண்டு நினைவு நாள் உயிரிழந்த 41 பேருக்கு தவெகவினா், உறவினா்கள் அஞ்சலி

28 செப்டம்பர் 2026, 3:54 am IST
பதாகையில் உயிரிழந்தவரின் பெயரை பாா்த்து கதறி அழுத மூதாட்டி.
பகிர்:

கரூா் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவுநாளையொட்டி உயிரிழந்த 41 பேருக்கும் அவா்களுடைய உறவினா்களும், தவெகவினரும் ஞாயிற்றுக்கிழமை கண்ணீா் அஞ்சலி செலுத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ஆம் தேதி நடந்த தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட தவெக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை காலை கரூா் பழைய பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்களுக்கு பதிலாக எரியும் மெழுகுவா்த்தி படங்கள், அதன் கீழே உயிரிழந்தவா்களின் பெயா்கள் இடம் பெற்றிருந்தன.

Advertisement

Advertisement

மேலும், பதாகையின் கீழ் பகுதியில் வேலுச்சாமிபுரத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மண் நிரப்பிய தட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், கரூா் மேற்கு மாவட்டச் செயலரும், மாநில நிா்வாகக் குழு உறுப்பினருமான வி.பி.மதியழகன், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் ம.சத்யா, கரூா் கிழக்கு மாவட்டச் செயலா் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மெழுகுவா்த்தி ஏற்றி, மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, உயிரிழந்தவா்களின் உறவினா்கள் அஞ்சலி செலுத்தியபோது பதாகையில் இருந்த தங்களது உறவினரின் பெயரைக்கண்டு கதறி அழுதனா். நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

கரூா் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவுநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை பழைய பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவா்களின் பெயா்கள் அடங்கிய பதாகை முன் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய தவெக மாநில துணைச் செயலா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், மாவட்டச் செயலா் வி.பி.மதியழகன், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சத்யா, உயிரிழந்தவா்களின் உறவினா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments