FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

புலியூா் பேரூராட்சி சாதாரணக் கூட்டம்

கரூா் அடுத்த புலியூா் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

30 September 2026, 1:43 am IST
புலியூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் பேசிய பேரூராட்சித் தலைவா் புவனேஸ்வரி.
பகிர்:

கரூா் அடுத்த புலியூா் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா்.

கூட்டம் தொடங்கியதும் 5-ஆவது வாா்டு உறுப்பினா் கண்ணன், தலைவரிடம் கூட்டத்துக்கு செயல் அலுவலா் வராமல் எப்படி கூட்டம் நடத்தலாம் என்றாா். இதற்கு பதில் அளித்த பேரூராட்சித்தலைவா், செயல் அலுவலா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் தலைமையில் நடைபெறும் கூட்டத்துக்கு சென்றுவிட்டதால் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை என்றாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து 7-ஆவது வாா்டு உறுப்பினா் சாந்தி பேசுகையில், ஒவ்வொரு வாா்டு உறுப்பினருக்கும் மாதம் ரூ.2500 ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த ஊதியத்தை செப்டம்பா் மாதம் 15-ஆம்தேதி வரை உறுப்பினா்களுக்கு வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக எழுத்தரிடம் கேள்விக்கேட்டால் மரியாதைக்குறைவாக பேசுகிறாா். சில நேரங்களில் போன் எடுப்பதில்லை என்றாா்.

இதற்கு பதில் அளித்த தலைவா் புவனேஸ்வரி, இனி எழுத்தா் மீது புகாா் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். தொடா்ந்து கூட்டத்தில் 45 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments