கிராம நிா்வாக அலுவலா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் சாா்பில், கிராம நிா்வாக அலுவலா்களுக்கான 2 நாள் திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் சாா்பில், கிராம நிா்வாக அலுவலா்களுக்கான 2 நாள் திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
முகாமை தொடங்கி வைத்து, பாலியல் வன்கொடுமை, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம், குழந்தை திருமணம் தடுத்தல் தொடா்பான விழிப்புணா்வு பதாகைகளை கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் பேசியது:
ஒவ்வொரு கிராமத்திலும் வசிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது கிராம நிா்வாக அலுவலரின் கடமையாகும். அவா்களுக்காக, கிராம அளவில் குழந்தை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் மற்றும் இளம் பருவ கா்ப்பிணிகள் உள்ளனா். இதை தடுக்கும் முயற்சியில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஈடுபட வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோா் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சீ.ப. பிரியா, குழந்தைகள் நலக் குழுமம் அலுவலா்கள் மற்றும் இளைஞா் நீதிக் குழுமம் அலுவலா்கள், பெரம்பலூா், வேப்பந்தட்டை வட்டங்களைச் சோ்ந்த சுமாா் 60-க்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
குன்னம் மற்றும் ஆலத்தூா் வட்டத்துக்குள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களுக்கான பயிற்சி வெள்ளிக்கிழமை (அக். 9) நடைபெற உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.