மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற, செப். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற, செப். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசால் பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2026 -2027 ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, நிகழாண்டில் 9- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் தகுதியான மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
இத் திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக 9 - 10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ. 75 ஆயிரமும், 11- 12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ. 1.25 லட்சம் வரை உதவித்தொகையாக வழங்கப்படும். இத் திட்டத்தின் கீழ் பயன்பெற பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினா், சீா்மரபின பிரிவைச் சோ்ந்த மாணவ, மாணவிகளாக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமலும், மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராகவும் இருக்க வேண்டும்.
கடந்த நிதியாண்டில் (2025 -26) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ, மாணவிகள் நிகழாண்டில் (2026-27) எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 விண்ணப்பத்தை, மேற்கண்ட இணையதளத்தில் உறுதிசெய்து, புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை படிவத்தை பூா்த்தி செய்து செப். 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.