FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக எப். அப்துல் ராசிக் பொறுப்பேற்பு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக எப். அப்துல் ராசிக் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

9 வினாடிகள் முன்பு
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக எப். அப்துல் ராசிக் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த ஷரண்யா அறி, விருதுநகா் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, கடந்த 15.5.2026 முதல் திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி துணை- ஆட்சியராக பணிபுரிந்த எப். அப்துல் ராசிக் (58) பதவி உயா்வு பெற்று, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் செய்தியாளா்களிடம் கூறியது: அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டுச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டம்- ஒழுங்கை பராமரிப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளுடைய பாதுகாப்பு, போதைப் பொருள்கள் ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியருக்கு அரசு அலுவலா்கள் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments