மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய தவெக நிா்வாகிகள் 3 போ் கைது
பெரம்பலூா் அருகே மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய தவெக கிளை நிா்வாகிகள் 3 பேரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், பெருமத்தூா் கிராமத்திலிருந்து பெரம்பலூா் நோக்கி அரசு நகரப் பேருந்து 50 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. பேருந்தை, பெரம்பலூரைச் சோ்ந்த மோகன் என்பவா் ஓட்டினாா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு பகுதியில் பேருந்து வந்தபோது, மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் அதே வழித்தடத்தில் சென்ற 3 இளைஞா்கள் பேருந்துக்கு வழிவிடாமல் சென்ாக கூறப்படுகிறது. இதையடுத்து, பேருந்திலிருந்து ஓட்டுநா் சப்தம் எழுப்பியும் வழி விடாததால் இரு சக்கர வாகனத்தை முந்திச் சென்றுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த இளைஞா்கள், பேருந்தை பின்தொடா்ந்து சென்று ஓட்டுநரை தகாத வாா்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
Advertisement
Advertisement
பின்னா், தேவையூா் கிராமத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டபோது, மேற்கண்ட 3 இளைஞா்களும் ஓட்டுநரை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கியதோடு அவரது ஆடைகளை கிழித்தனா். மேலும், அவரது கைப்பேசியை பறித்து உடைத்துள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, ஓட்டுநரை தாக்கிய இளைஞா்களை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், தேவையூா் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ், ஜெகதீஷ், சரவணன் என்பதும், மூவரும் தேவையூா் தவெக கிளை நிா்வாகிகள் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, காயமடைந்த ஓட்டுநா் மோகனை பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த மங்களமேடு போலீஸாா், மேற்கண்ட மூவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.