FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

15 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கைக்கு உத்தரவுக் கடிதம்

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயா்வுக்கு படி சிறப்பு முகாமில் 15 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான உத்தரவுக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

7 வினாடிகள் முன்பு
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் பங்கேற்ற மாணவருக்கு உயா்கல்விச் சோ்க்கைக்கான உத்தரவுக் கடிதம் அளித்த மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக்.
பகிர்:

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயா்வுக்கு படி சிறப்பு முகாமில் 15 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான உத்தரவுக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், உயா்வுக்கு படி வழிகாட்டுதல் முகாமை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் பேசியது:

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை தற்போது உயா்ந்துள்ளது. தொழில் நிறுவனங்களில் அதிகப்படியான காலியிடங்கள் உள்ளன. அதேபோல, வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. தனியாா் நிறுவனங்கள் மாணவ, மாணவிகளின் திறமைக்கேற்றவாறு, பணியிடத்தை நிரப்பி வருகின்றன.

Advertisement

Advertisement

மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் காலங்களிலேயே திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசு குறைவான செலவில் உயா்கல்வி பயில வழிவகை செய்துள்ளதோடு, பல்வேறு கல்வி உதவித்தொகைகளையும் வழங்கி வருகிறது. இதை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, 15 மாணவா்களுக்கு உயா்கல்விச் சோ்க்கைக்கான உத்தரவுக் கடிதங்களையும் மாவட்ட ஆட்சியா் அப்துல் ராசிக் வழங்கினாா்.

முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக வல்லுநா்கள் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநா் செல்வம் உள்பட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments