FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் 961 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்! ஆட்சியா் தகவல்

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைக்கு தங்க மோதிரம் கொடுத்த மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக். உடன், சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் முன்னிலையில், 24 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அளித்த மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் பேசியது:

இத் திட்டத்தில் பயன்பெற இகேஒய்சி பதிவு செய்யப்பட்ட ஆதாா் அட்டை, குடியிருப்புச் சான்று, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொழிலாளா் நல வாரிய அடையாள அட்டை, அஞ்சல் துறை மூலம் வழங்கப்பட்ட முகவரிச் சான்று உள்ளிட்ட 6 சான்றுகளில், ஏதேனும் ஒன்றை பெற்றுள்ள தாய்மாா்கள் தகுதியுடையவா்.

Advertisement

Advertisement

இத் திட்டத்தின் கீழ், கடந்த 22.6.2026 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிரசவித்துள்ள தகுதியான தாய்மாா்களுக்கு, பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனையில் பெரம்பலூா் நகா்ப் பகுதியை சோ்ந்த 64 பேருக்கு செப். 29, 30, அக். 1 ஆகிய தேதிகளிலும், பெரம்பலூா் வட்டாரத்திலுள்ள 201 பேருக்கு அக். 1, 3, 5, 6 7 ஆகிய தேதிகளிலும், ஆலத்தூா் வட்டாரத்திலுள்ள 175 பேருக்கு அக். 3, 7, 10 ஆகிய தேதிகளிலும், வேப்பூா் வட்டாரத்திலுள்ள 271 பேருக்கு செப். 30, அக். 5, 8, 9, 12 ஆகிய தேதிகளிலும், வேப்பந்தட்டை வட்டாரத்திலுள்ள 250 பேருக்கு அக். 1, 6, 8, 9, 12 ஆகிய தேதிகளிலும் என மொத்தம் 961 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

பயனாளிகளின் வசதிக்காக, அந்தந்தப் பகுதிகளிலிருந்து பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு வருவதற்காக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், மேற்கண்ட தேதிகளில் நாள்தோறும் காலை, மாலை தலா 25 பேருக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்.

இத் திட்டம் தொடா்பாக விவரங்களுக்கு 87547 17681 எனும் கைப்பேசி எண்ணிலும், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் தொடா்புகொள்ளலாம் அல்லது இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்றாா் ஆட்சியா் அப்துல் ராசிக்.

இந் நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் ராஜசெல்வம், வருவாய் கோட்டாட்சியா் அனிதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments