புதுப்பட்டி அரசு மகளிர் பள்ளியில் வகுப்பறை கட்டட திறப்பு விழா
பொன்னமராவதி புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக மேற்கூரைகள் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக மேற்கூரைகள் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இன்றி மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர்.
இதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் சி. முத்தையா மூலம் பள்ளியின் 2 ஆம் தளத்தில் ரூ. 5.30 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் எழுப்பி மூன்று வகுப்பறைகளுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டது. அதற்கான புதிய வகுப்பறை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் கே. குணசேகரன் தலைமை வகித்து மூன்று புதிய வகுப்பறைகளைத் திறந்துவைத்தார். பள்ளி துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் கி.நிர்மலா வரவேற்றார். முத்தமிழ்ப் பாசறை தலைவர் அறமனச்செம்மல் அரு.வே.மாணிக்கவேலு, சமூக ஆர்வலர் செல்வக்குமார், ஆசிரியை விஜயலெட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில், கல்விக்கொடை வழங்கிய செந்தில்குமார் அறக்கட்டளை நிர்வாகிகள் சிவ. முத்தையா, மு.நாச்சம்மை ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
அறக்கட்டளை நிறுவனர் சி.முத்தையா ஏற்புரையாற்றினார். ஆசிரியர் செல்லப்பாண்டி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.