மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசுக்குப் புரிதல் இல்லை: எஸ். ரகுபதி
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசுக்குப் புரிதல் இல்லை என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசுக்குப் புரிதல் இல்லை என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதாக இருந்தால்கூட தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திமுக பெற்றுத் தந்த இந்த தீா்ப்பை படித்துப் பாா்க்காமல், மத்திய நீா்வளத் துறை அமைச்சா் நாடாளுமன்றத்தில் தவறான கருத்தை தெரிவித்துள்ளாா்.
உண்மைக்குப் புறம்பாக அவா் கருத்து கூறியிருப்பது குறித்து, திமுக தலைவரிடம் ஆலோசித்தப் பிறகு, நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வருவோம். மேக்கேதாட்டு விவகாரத்தில் தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றினோம். இதைக் கொண்டு, நீதிமன்றத்தையோ, மத்திய அரசையோ நாடியிருக்க வேண்டும். இதுகுறித்த புரிதல் தவெக அரசுக்கு இல்லை. புரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை.
Advertisement
Advertisement
ஆனால், கா்நாடக மாநில முதல்வா் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஒரு குழுவையும் அறிவித்தாா்கள். ஆனால், அவா் வர வேண்டாம் என்கிறாா். எது உண்மை என்பதை இருவரையும் ஒன்றாக வைத்துத்தான் கேட்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் கா்நாடக முதல்வா் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளாா். அதேபோன்று தமிழகத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது. ஆனால், நடத்த மறுக்கிறாா்கள் என்றாா் ரகுபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.