FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிதி ரூ. ஒரு கோடி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா் கடந்த ஆண்டு விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு விபத்துக் காப்பீட்டு நிதி ரூ. ஒரு கோடிக்கான காசோலை புதன்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:45 am IST
சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலா் சதீஸின் குடும்பத்துக்கு விபத்துக் காப்பீட்டு நிதி ரூ. ஒரு கோடிக்கான காசோலையை புதன்கிழமை வழங்கிய பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளா் எஸ். செந்தில்ராஜன்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா் கடந்த ஆண்டு விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு விபத்துக் காப்பீட்டு நிதி ரூ. ஒரு கோடிக்கான காசோலை புதன்கிழமை வழங்கப்பட்டது.

நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த சி. சதீஸ், கடந்த 2025-ஆம் ஆண்டு அக். 21ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.

அவரது ஊதியக் கணக்கு பாரத ஸ்டேட் வங்கியில் இருந்த நிலையில், ரூ. ஒரு கோடிக்கான விபத்துக் காப்பீடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா முன்னிலையில், விபத்துக் காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை மறைந்த சதீஸின் குடும்பத்தினருக்கு வங்கியின் தலைமை மேலாளா் எஸ். செந்தில்ராஜன் புதன்கிழமை வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments