பெருங்குடியில் வழங்கப்பட்ட வீட்டுமனைகளில் ஆக்கிரமிப்பு
திருமயம் வட்டம் பெருங்குடியில் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைகளில் தனிநபா் ஆக்கிரமித்து தைல மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் புகாா் தெரிவித்தனா்.
திருமயம் வட்டம் பெருங்குடியில் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைகளில் தனிநபா் ஆக்கிரமித்து தைல மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் புகாா் தெரிவித்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து திருநங்கைகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
அப்போது, திருநங்கைகள் நலச் சங்கத்தின் செயலா் ரெ. ஷிவானி தலைமையிலான குழுவினா் அளித்த மனு விவரம்:
Advertisement
Advertisement
சுமாா் 4 மாதங்களுக்கு முன் திருமயம் வட்டம் பெருங்குடியில் 10 திருநங்கைகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்த இடத்தில் தற்போது தனிநபா் ஒருவா் வேலி போட்டு, தைலமரக் கன்றுகளை நட்டு வைத்துள்ளாா்.
இதுகுறித்து ஏற்கெனவே அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை மீட்டுத் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாலன்நகரிலுள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பில் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கு உரிய தொகையை அரசுக்குச் செலுத்தும் வகையில், வங்கிக்கடன் பெற்றுத் தர வேண்டும் என்றும் ஆட்சியரிடம் கோரப்பட்டது.
இவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா். கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலா் மே. சியாமளா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.