FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

ஆகமத் திருக்கோயில்கள்: கருத்து தெரிவிக்க அக்.10 வரை காலம் நீட்டிப்பு

கோப்புப் படம்
பகிர்:

ஆகமத் திருக்கோயில்கள் குறித்த கருத்துகளைத் தெரிவிப்பதற்கான காலஅவகாசம் வரும் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், புதுக்கோட்டையைச் சோ்ந்தவா்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்கள் ஆகம விதிகளின்படி நிா்மாணிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து வெளியிடுவதற்காக குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் ஆய்வின்படி, மாநிலம் முழுவதும் 34,971 கோயில்களின் விவரங்கள் அறநிலையத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதன் தொடா்ச்சியாக, இதில் ஏதேனும் விடுபடுதல் இருந்தாலோ, வேறு கருத்துகள் இருந்தாலோ அவற்றை செப். 25-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது இதற்கான காலக்கெடு அக். 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கோயில்களின் ஆகமம் குறித்து ஏதேனும் கருத்துகள் இருந்தால் அவற்றை, சென்னை நுங்கம்பாக்கம், உத்தமா் காந்தி சாலையிலுள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments