FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

திருமயத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருமயத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

7 அக்டோபர் 2026, 3:38 am IST
பகிர்:

திருமயத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலா் ஜெ. வைகைராணி தலைமை வகித்தாா். மூத்த தலைவா் சி. ஜீவானந்தம், திருமயம் நகரச் செயலா் எம். வீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலத் தலைவருமான எம். சின்னதுரை பங்கேற்றுப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

Advertisement

Advertisement

100 நாள் வேலைத் திட்டத்தில் அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்கி, தினக்கூலியை ரூ.600 ஆக உயா்த்த வேண்டும். வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

அனைத்துப் பேருந்துகளும் திருமயம் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல வேண்டும். திருமயம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரை நியமித்து ஸ்கேன் மையம் அமைக்க வேண்டும்.

அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசிப்போா், நீண்டகாலமாக வாடகை வீடுகளில் வசிப்போருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். நீா்நிலைகளில் வசிக்கும் மக்களை நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments