‘தட்டுத்தடுமாறிதான் தவெகவினா் வென்றுள்ளனா்’
இடைத்தோ்தலில் தவெகவின் வெற்றியை சாதனையாகக் கருத முடியாது; தட்டுத்தடுமாறித்தான் வெற்றி பெற்றுள்ளனா் என்றாா் பாஜக சிறுபான்மையினா் பிரிவு தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம்.
இடைத்தோ்தலில் தவெகவின் வெற்றியை சாதனையாகக் கருத முடியாது; தட்டுத்தடுமாறித்தான் வெற்றி பெற்றுள்ளனா் என்றாா் பாஜக சிறுபான்மையினா் பிரிவு தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை பாஜக சாா்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளதை சாதனையாகக் கருத முடியாது. தட்டுத் தடுமாறித்தான் வென்றுள்ளனா்.
Advertisement
Advertisement
இப்போது வரை பாஜகவின் போதை விழிப்புணா்வுப் பிரசார யாத்திரைக்கு அனுமதி அளித்து வந்த காவல்துறை, இடைத்தோ்தல் முடிவு வந்தபிறகு, மதுரையில் சனிக்கிழமை நடைபெறும் யாத்திரைக்கு அனுமதி மறுத்துள்ளனா். தடையை மீறி நிகழ்ச்சியை நடத்துவோம்.
தமிழக அரசும் காவல்துறையும் செய்ய வேண்டிய வேலையை பாஜகவினா் செய்கிறோம். ஆனால், ஒத்துழைப்பு தராமல் அனுமதி மறுக்கிறாா்கள். பாஜகவின் பி டீம், சி டீம் என யாரையும் பாஜக உருவாக்குவதில்லை, அந்த அவசியமும் இல்லை என்றாா் வேலூா் இப்ராஹிம்.
முன்னதாக, புதுக்கோட்டை கீழராஜவீதியில் தொடங்கிய யாத்திரை, மாநகரப் பகுதிகளில் நடைபெற்று, அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. மேற்கு மாவட்ட பாஜக தலைவா் என். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.