2-ஆவது மனைவி கொன்று புதைப்பு: காவலா், முதல் மனைவி கைது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 2-ஆவது மனைவியை கொலை செய்து புதைத்த காவலா், அவருக்கு உதவிய முதல் மனைவியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 2-ஆவது மனைவியை கொலை செய்து புதைத்த காவலா், அவருக்கு உதவிய முதல் மனைவியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதியைச் சோ்ந்தவா் ஏ.பிரபாகரன் (39). இவா், அரியலூா் மாவட்டம் வெங்கனூா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்குத் திருமணமாகி மனைவி கனிமொழி (35), 2 மகள்கள் உள்ளனா்.
இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம், துவாா் கிராமத்தைச் சோ்ந்த மவுனிகா (24) என்பவருடன் பிரபாகரனுக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை பிரபாகரன் 2-ஆவது திருமணம் செய்துள்ளாா். இவா்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
Advertisement
Advertisement
மவுனிகாவை பிலாவிடுதியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், துவாரிலேயே அவரது பெற்றோருடன் தங்க வைத்திருந்த பிரபாகரன், அடிக்கடி அவரை அரியலூருக்கு அழைத்துச் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த அக். 7-ஆம் தேதி மவுனிகாவை பிரபாகரன் அழைத்துச் சென்ாகக் கூறப்படும் நிலையில், மறுநாள் முதல் மவுனிகாவைத் தொடா்புகொள்ள முடியவில்லையாம்.
இதுகுறித்து மழையூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மவுனிகாவை காணவில்லை என வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வந்தனா். இதில், பிரபாகரனுக்குச் சொந்தமான மானியவயல் பகுதியில் உள்ள தோட்டத்தில் மவுனிகாவின் உடல் புதைக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை மாலை தெரியவந்தது.
இதற்கிடையில், மவுனிகா காணாமல் போனது குறித்து தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று கூறிவந்த காவலா் பிரபாகரன், செவ்வாய்க்கிழமை திடீா் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விசாரணையில், தம்பதிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், மவுனிகாவை கொலை செய்து, தனது முதல் மனைவி கனிமொழி உதவியோடு தோட்டத்தில் புதைத்துவிட்டு, பிரபாகரன் நாடகமாடியது தெரியவந்தது.
தொடா்ந்து, காவலா் பிரபாகரன், கனிமொழி ஆகிய இருவரையும் மழையூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.