FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

மாணவா்களுக்காக 4 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை நீட்டிப்பு: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

மாணவா்களுக்காக 4 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை நீட்டிப்பு..

6 செப்டம்பர் 2026, 12:37 am IST
அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி ஆா். புதுப்பட்டினத்திலிருந்து ஓரியூா் வரை வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்ட அரசுப் பேருந்தை சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிறுகாசாவயல், ஆா். புதுப்பட்டினம், அத்தானி மற்றும் மணமேல்குடி ஆகிய 4 இடங்களில் இருந்து செல்லும் அரசுப் பேருந்துகளை, பள்ளி, கல்லூரி மாணவா்களின் வசதிக்காக நீட்டிப்பு செய்யப்பட்ட வழித்தடத்தில் பேருந்து சேவையை தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்த 4 வழித்தட நீட்டிப்பு மூலம் சுமாா் ஆயிரம் கூடுதல் பயனாளா்கள் பயன்பெறுவாா்கள் என போக்குவரத்துக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் இ. அபிநயா, மண்டலப் பொதுமேலாளா் காா்த்திகேயன், துணை மேலாளா்கள் சிராஜூதீன், தில்லைராஜ், கிளை மேலாளா் மணிவண்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments