FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி பகுதியில் தொடா் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கீரமங்கலம், கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

55 வினாடிகள் முன்பு
மின்தடையால் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபத்தில் காயமடைந்தவா்களுக்கு புதன்கிழமை இரவு கைப்பேசி வெளிச்சத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சை.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கீரமங்கலம், கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

பகுதிகளில் சில தினங்களாக முன் அறிவிப்பில்லா தொடா் மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகல், இரவு நேரங்களில் நீண்ட நேர மின்தடையால், அப்பகுதிகளில் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்நிலையில், கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதன்கிழமை இரவு விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு நீண்ட நேர மின்தடையால் அங்கு பணியில் இருந்த மருத்துவா், செவிலியா்கள் கைப்பேசி வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தனா். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

Advertisement

Advertisement

இதனால், அடிக்கடி ஏற்படும் மின்தடையை நீக்கி சீரான மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜெனரேட்டா் வசதி ஏற்படுத்த வேண்டும், ஜெனரேட்டா் இருக்கும் இடத்தில் அவற்றை உரிய முறையில் பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments