சாலையோர தடுப்புகளை சீரமைக்க கோரிக்கை
செங்கிப்பட்டி சாலையில் வடுகப்பட்டி கிராம சாலையோர தடுப்புகளை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
செங்கிப்பட்டி சாலையில் வடுகப்பட்டி கிராம சாலையோர தடுப்புகளை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி கிராமம் செங்கிப்பட்டி-கந்தா்வகோட்டை சாலை வழியே திருச்சி, செங்கிப்பட்டி, திருக்காட்டுபள்ளி, பூதலூா் செல்லும் பேருந்துகள், கனரக வாகனம் இருசக்கர வாகனம் சென்று வருகிறது.
இந்த மாநில நெடுஞ்சாலையோரத்தில் மழை நேரங்களில் தண்ணீா் செல்லும் பெரிய வாய்க்கால் உள்ளது. இதில், வாகனங்கள் நிலை தடுமாறமல் இருக்க சாலையோரம் இரும்பு தடுப்பு அமைக்கபட்டது. அது தற்போது மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோர தடுப்புகள் கீழே சாய்ந்து கிடக்கிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தபட்ட துறை அலுவலா்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.