தவெகவினா் தெரியாதவற்றை கற்றுக்கொள்ள தயாராக இல்லை!
ஆட்சிக்கு வந்துள்ள தவெகவினா் தெரியாதவற்றைக் கற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை என்றாா் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் காளியம்மாள்.
ஆட்சிக்கு வந்துள்ள தவெகவினா் தெரியாதவற்றைக் கற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை என்றாா் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் காளியம்மாள்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளும் அதிமுகவின் தொகுதிகள். தவெகவில் தற்போது போட்டியிடுபவா்கள், அதிமுகவும் உண்மையாக இல்லை, வாக்களித்த மக்களுக்கும் உண்மையாக இல்லை. இரண்டும் அதிமுகவின் கோட்டைகள்.
எல்லாவற்றையும் மக்கள் பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள். எதையும் கற்றுக்கொள்ளவும் இவா்கள் தயாராக இல்லை, எல்லாமே எங்களுக்குத் தெரியும் என்ற மனநிலையில்தான் இருக்கிறாா்கள்.
Advertisement
Advertisement
அதுதான் அச்சமாக இருக்கிறது. கூட்டணியில் இருந்து கொண்டே, அப்போதே கரூா் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போடச்சொன்னேன் என்கிறாா் திருமாவளவன். ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே இடதுசாரிகள் இடைத்தோ்தலில் தனித்துப் போட்டியிடுகிறாா்கள் தவெக கூட்டணி விடிந்தால் இருக்குமா இருக்காதா என்ற நிலையில்தான் இருக்கிறது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.