FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

நாசாவுக்கு கல்விப் பயணம்: வெங்கடேஸ்வரா பள்ளி மாணவி தோ்வு

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி, விண்வெளி அறிவியல் போட்டியில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நாசாவுக்கு கல்விப் பயணம் செல்வதற்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

விண்வெளி அறிவியல் போட்டிகளில் வென்று நாசா பயணத்துக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவி ஜெயவா்த்தினியை செவ்வாய்க்கிழமை பாராட்டிய பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி.
பகிர்:

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி, விண்வெளி அறிவியல் போட்டியில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நாசாவுக்கு கல்விப் பயணம் செல்வதற்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

‘கோ4குரு’ அமைப்பின் சாா்பில் சா்வதேச விண்வெளி அறிவியல் போட்டிகள் இணையவழியில் அண்மையில் நடத்தப்பட்டன. இந்தப் போட்டியில், புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவி ம.க. ஜெயவா்த்தினி தேசிய அளவில் 3-ஆம் இடம் பெற்றுள்ளாா்.

இதன் மூலம் நாசாவுக்கு கல்விப் பயணம் செல்வதற்கு அவா் தோ்வாகியுள்ளாா். இதையடுத்து, மாணவி ஜெயவா்த்தினிக்கு, பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி, இயக்குநா் ரா. சுதா்சன், வழிகாட்டியான அறிவியல் ஆசிரியா் கமல்ராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை, நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments