முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்குக் கல்வி உதவித்தொகை
முன்னாள் படைவீரர்களைச் சார்ந்த சிறார்களுக்குக் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
முன்னாள் படைவீரர்களைச் சார்ந்த சிறார்களுக்குக் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு ஆளுநரைத் தலைவராகக் கொண்ட தொகுப்பு நிதியிலிருந்து ஒவ்வொரு கல்வி ஆண்டும் கல்விப் பயற்சி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு, தொழில்நுட்பப் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு ஆகியவற்றுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இக்கல்வி உதவித்தொகை பெற பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்து அதில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் கல்வி உதவித்தொகைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் அக். 15-ம் தேதி வரை பெறலாம். நிறைவு செய்யப்பட்ட முழுமையான விண்ணப்பங்களை அளிக்க கடைசி தேதி நவ. 15-ம் தேதி. மேலும், விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி கல்வி உதவித்தொகையை முன்னாள் படைவீரர்கள் பெற்று பயனடையலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.